அரசியலுக்கு வந்தா பொய் சொல்லனும்.. பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் “டான்” டிரெய்லர். !

Author: Rajesh
6 May 2022, 7:47 pm

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை லைக்கா மற்றும் எஸ்.கே. பிரொக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், சூரி, சமுத்திரகனி, ராதாரவி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ள நிலையில், அவர் இசையில் உருவாகியுள்ள ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாவதையொட்டி ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி என இரு பருவங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு மாணவன் தான் என்னவாக வேண்டும் என்று கேள்வி கேட்டுக் கொண்டே டிரெய்லரில் காட்சிகள் முடிகிறது. இதற்கான விடை படத்தில் தெரியும். ஆக மொத்தத்தில் ‘டான்’ டிரெய்லரால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியிருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…