சிவகார்த்திகேயனை இயக்க போகும் அஜித் பட இயக்குனர்.? வெளியான மாஸ் அப்டேட்..!
Author: Rajesh3 May 2022, 11:25 am
தமிழில் மிகமுக்கிய நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். பல வெற்றிப்படங்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக மாறிய சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டாக்டர் படத்திற்கு முன் சில படங்கள் தோல்வியை சந்தித்த சிவகார்த்திகேயன் சற்று பின்தங்கினார்.
அந்த சமயத்தில் வெளியான டாக்டர் படம் அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. அதைத்தொடர்ந்து தற்போது டான் திரைப்படம் வெளியாகவுள்ளது. புதுமுக இயக்குனரான சிபி சக்கரவர்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து தெலுங்கில் படம் இயக்கிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்ததும் சிவகார்த்திகேயனுடன் இணையும் படத்திற்கான வேலைகள் தொடங்கும் என பேசப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் சினிமா கெரியரில் முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது மங்காத்தா. இந்த படத்தில் அஜித்தை மாறுப்பட்ட கோணத்தில் நடிக்க வைத்து திரைக்கதையில் வித்தியாசங்களை காட்டி வெற்றி படமாக மாற்றினார்.
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும், திரைப்படத்தினை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.