மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சிவகார்த்திகேயன்.? டான் டிரெய்லர் : வெடித்த புது சர்ச்சை.?

Author: Rajesh
7 May 2022, 1:51 pm

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டான். இந்த படத்தில் விஜய் டி.வியின் மூலம் பிரபலமடைந்த பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
ரசிகர்கள் மத்தியில் டான் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கல்லூரி, மற்றும் பள்ளியில் ரகளை செய்யும் ஒரு மாணவராக தான் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது அந்த ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது.

மேலும் ஒரு காட்சியில் ‘ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி’ என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக்கொண்டிருப்பார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் பொது வெளியில் பள்ளி மாணவர்கள் செய்யும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே தமிழ் திரைப்படங்கள் தான் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களில் சிலர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முயலும் வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வருகிறது.

இப்படி இருக்கும் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், டான் திரைப்படம் இருக்குமா என்ற கேள்வி பெற்றோர்களின் மனங்களில் தற்போது எழுந்துள்ளது. மேலும், இது போன்ற திரைப்படம் எடுத்திருப்பது சரியா எனவும் நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை இணையத்தில் திட்டி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி