ப்ளூ சட்டை மாறன் குரலில் பேசிய சிவகார்த்திகேயன்.. டான் படத்திற்கு விமர்சனம் செய்த வீடியோ வைரல்..!

Author: Rajesh
14 May 2022, 10:58 am

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மற்ற நடிகர்கள் போல மிமிக்ரி செய்து பேசியுள்ளார்.

அப்போது இந்த படத்திற்கு நீங்களே விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்க சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் குரலில் விமர்சனம் செய்துள்ளார். இந்தப் படத்தில் எல்லா விதமான எமோஷனல் இருக்கு, ஆனா எதுக்கு இருக்குனு கேட்காதீங்க குடும்பத்தோடு போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1110

    1

    0