ஒரே ஒரு ட்வீட் தான்.. நெட்டிசன்களிடம் சிக்கி சின்னா பின்னமாகும் சிவகார்த்திகேயன்.!

Author: Rajesh
16 June 2022, 6:30 pm

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு , 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.டான்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் SK20. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் எவ்வளவு தீவிரமான ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிவர். டான் படத்திலும் நிறைய ரஜினி reference பயன்படுத்தி இருந்தார். இந்நிலையில், ரஜினி படம் குறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்டது செம வைரல் ஆகி வருகிறது.

2007ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்த ‘சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா, சாலமன் பாப்பையா, சுமன் போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பாட்ஷா, படையப்பா படங்களை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் அவர்களின் ஸ்டைலை இதில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் சிவாஜி படத்தின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தின் அம்சமாக, படத்தின் ஷூட்டிங் காட்சிகள், புகைப்படங்கள் என இணையத்தில் உலா வருகிறது. மேலும், சூப்பர்ஸ்டார் அவர்களும் அப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயனும் டீவ்ட் ஒன்று செய்துள்ளார். அதில் அவர், நான் சிவாஜி படத்தை 15 முறை தியேட்டரில் பார்த்து இருக்கிறேன். சூப்பரான மாசான படம் என்று தலைவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.

இந்த ட்வீட் சோஷல் மீடியாவில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும், நீங்கள் தலைவர் ரசிகர் என்று தெரியும். ஆனால், இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது. 15 முறை நீங்கள் படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் பொய் என்று சிவகார்த்திகேயன் ட்விட்டை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!