வசூலில் “டான்” ஆக மாறும் SK.. முதல் நாள் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா.?

Author: Rajesh
14 May 2022, 12:44 pm

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு என்ன வருமோ, அதற்கு எற்ற கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர், இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 100 வசூலித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்த நேற்று வெளியான டான் திரைப்படமும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இப்படம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் பட வசூல்களை காலி செய்து வருகிறது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகாமாக இருந்ததால், அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அதன் காரணமாக வசூலும் நல்ல விதமாக வந்து கொண்டிருக்கிறது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் 9 கோடி வசூல் செய்துள்ளதாம். அதே போல வெளிமாநிலம், வெளிநாடு என சேர்த்து பார்த்தால் இந்த டான் திரைப்படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தனது ஒவ்வொரு படத்திலும், அடுத்ததடுத்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தரமான படக்கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால், நிச்சயம் வரும்காலத்தில் பாக்ஸ் ஆபிஸ் டான்-ஆக சிவகார்திகேயன் உருவெடுத்து விடுவார் என கூறப்படுகிறது.

  • Ajith screamed after Vijay's dialogue.. INTERVAL scene from GOOD BAD UGLY leaked விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!