விழுப்புரத்தில், கடன் தொல்லையால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், தனது நண்பரின் குடும்பத்தையும் கொல்ல முயன்ற சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விழுப்புரம்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (45). இவர் அருள்வாக்கு கூறி வந்து உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள அம்மகளத்தூர் என்ற கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (61) என்பவருக்கும், முரளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நல்ல நண்பர்களாகி உள்ளனர். இதனால், கணேசன் வீட்டிலேயே முரளி பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல், கிராமத்தில் உள்ள மக்களுக்கும் குறிசொல்லி வந்துள்ளார். இவரது உதவியாளராக ராமமூர்த்தி (32) என்பவர் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கோயில் செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்களிடம் பல லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படவே, முரளியிடம் கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு வந்து உள்ளார்.
இதனால், முரளி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதன்படி, மார்கழி வெள்ளியான நேற்று அதிகாலை, குடியிருப்பு அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்துவிட்டு வீடு திரும்பிய முரளி, ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த விஷத்தன்மை கொண்ட பவுடரை தண்ணீரில் கலந்து முதலில் தானே குடித்துள்ளார்.
பின்னர் அதனை சாமி தீர்த்தம் எனக் கூறி உதவியாளர் ராமமூர்த்தி, நண்பர் கணேசன், அவரது மனைவி ராஜாம்மாள் (60), மகன்கள் முத்தையன் (40) மற்றும் கண்ணன் (32) ஆகிய 5 பேரையும் எழுப்பி குடிக்க கொடுத்துள்ளார். அவர்களும் தீர்த்தம் என நம்பி குடித்துள்ளனர்.
பின்னர் 6 பேரும் அடுத்தடுத்து மயங்கி உள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: மேல்மருத்துவத்தூர் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து இளம் பக்தை பலி.. ஆற்காடு அருகே சோகம்!
அங்கு 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார், முரளியிடம் விசாரணை நடத்தினர். நடந்ததைக் கூறிய முரளி, கடன் தொடர்பாக தனது உதவியாளர், நண்பர் கணேசனின் குடும்பத்தினரையும் கடன்காரர்கள் தொல்லை செய்வார்கள் என்பதால், அவர்களுக்கும் விஷம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இதனையடுத்து, முரளி மீது கொலை முயற்சி (307) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம், விஷம் குடித்தவர்களில் 4 பேர் அபாய நிலையை கடந்துவிட்டதாகவும், மற்ற 2 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.