அறம் செய் விரும்பு அறக்கட்டளை சார்பில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று விருகளை வழங்கி சிறப்பித்தனர்.
இயக்குனர் பாக்கியராஜ் மேடையில் பேசியபோது, வருடா வருடம் வழங்கும் இந்த விருதில் அவசியமான விருது என நான் கருதுவது ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது தான்.
மேலும் படிக்க: திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு : உயர்நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!!
வாடாத பூ என்பது படிப்பு; அது இருக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் ஆசிரியர்களுக்கு வழங்கும் விருது சிறப்பான விருது என்று நான் கருதுகிறேன். எனது வாத்தியார்களை எப்பொழுதும் நான் மறக்க மாட்டேன். ஆசிரியர் விருது என்பது பெருமைக்குரிய விருது என்று நான் கருதுகிறேன்.
சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்குவது பெருமைக்குரியது. எப்பொழுது பிறந்தோம் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் எதற்க்காக பிறந்தோம் என்று யாருக்கும் தெரியாது..
கடவுளை வணங்குவதற்கு நம்மை படைத்துள்ளனர் என்று கூறுவார்கள். அப்படி என்றால் பிறக்கும்போதே ராமா, கிருஷ்ணா என்று கூறுவது போல அறிவு இருந்திருக்கும். ஆனால் நமக்கு ஆறு அறிவு கொடுத்து இருப்பதற்கு நாம் ஏதாவது ஒன்றை சிந்திக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
சமூக ஆர்வலர்கள் உதவி செய்வது தனக்கு என்று இல்லாமல் பொதுச் சேவை என்று மனம் இருப்பது, இன்றளவும் அவர்கள் மறைந்தாலும் அவர்களது புகழ் மறையாது என்பதுபோல.. காமராஜர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் தனக்கென வாழாத மனிதர்கள். எனவே பொதுநல நோக்கத்தோடு அனைவரும் வாழ வேண்டும் எனக் கூறினார்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.