கரணம் தப்பினால் மரணம் : பேருந்தில் தொங்கியபடி ஸ்கேட்டிங் : பள்ளி மாணவரின் அபாயகரமான சாகசம்.. ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 8:39 pm

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது அபாயகரமான சாகச பயணங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் எல்லை மீறி வருகின்றனர்.

அன்றாடம் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றால் தான் அதிசயம். அப்படித்தான் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர், அந்த அரசு பேருந்தில் தொங்கியபடி அபாயகரமான சாகசத்தை செய்கிறார். பேருந்தில் தொங்கியபடி தனது காலில் ஸ்கேட்டிங் செய்வது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://vimeo.com/752999303

மேலும் மாணவரின் கவனம் சிதறியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி