காஞ்சிபுர கண்ட்ரோலே ரவுடி கையில்.. போலீசார் போட்ட ஸ்கெட்ச் : தானாக சிக்கிய விஷ்வா… வெட வெடத்துப்போன மக்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2023, 7:59 pm

காஞ்சிபுர கண்ட்ரோலே ரவுடி கையில்.. போலீசார் போட்ட ஸ்கெட்ச் : தானாக சிக்கிய விஷ்வா… விட விடத்துப்போன மக்கள்!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல குற்றவாளியான ரவுடி விஸ்வாவை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. வழக்கு விசாரணைக்காக விஸ்வாவை தேடி வந்த காவல்துறை, அவரை பிடிக்க முயன்றபோது தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்த நிலையில், சுட்டு கொலை செய்யப்பட்டார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

அவர் கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில், தான் விஷ்வா, சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுன்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களில் நாட்டு வெடி குண்டுகள் வீசி ஆறுக்கும் மேற்பட்ட கொலைகள் அங்கு நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் விஷ்வா விடம் போலீசார் விசரணை நடத்தினர். விஷ்வா மீது 6 கொலை வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, விஷ்வாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றுள்ளனர். அப்போதுதான் போலீசாரை தாக்கிவிட்டு விஷ்வா தப்ப முயன்றதாகவும் இதற்காக போலீசார் என்கவுன்டர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ரவுடி விஷ்வா நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளி காயம் அடைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் மற்றும் பாஜகவை சேர்ந்த சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் விஷ்வா சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி விஷ்வாவை தேடி வந்த நிலையில், தான் தற்போது என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 428

    0

    0