எம்ஜிஆர் குறித்து அவதூறு… ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2024, 2:48 pm
எம்ஜிஆர் குறித்து அவதூறு… ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு!
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் குறித்து சர்ச்சையாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உருவ பொம்மை எரிப்பு.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார் தமிழ்செல்வம் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர். எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ ராசாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய அதிமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்