ஆசைக்கு இணங்க மறுத்ததால் முகநூலில் அவதூறு : பாரத் முன்னணி பிரமுகர் மீது பெண் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 5:23 pm

திருப்பூர் : ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் – அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா . கணவரைப் பிரிந்து விவாகரத்தான இவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனிகுமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவரை விட்டு விலகிய நிலையில், பழனிகுமார் தொடர்ந்து மிரட்டி ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, சுதாவை மிரட்டி வருவதாகவும், இதனை மறுத்ததால் தன்னை முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுதா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் .

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். சம்பவம் தொடர்பாக சுதா மற்றும் பழனிகுமாரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 2519

    0

    0