எம்ஜிஆர் குறித்து அவதூறு பேச்சு… மீண்டும் அதிமுகவினர் புகார் : காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 7:39 pm

எம்ஜிஆர் குறித்து அவதூறு பேச்சு… மீண்டும் அதிமுகவினர் புகார் : காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு!!

திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் இன்று கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அம்மனுவில் கடந்த மாதம் (ஜனவரி) 25ம்தேதி நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ஒன்றை நான் யூடியூப் சேனல் வழியாக பார்க்க நேரிட்டது. இதனை 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.

இவ்வாறு எம்ஜிஆர் குறித்து அவதூறு பரப்பிய ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அந்த பதிவினை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் போது வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லைசுரேஷ், சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், செல்வராணி, புவனேஸ்வரி, சாகர், தினேஷ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 293

    0

    0