அடிமைகளே.. முதலில் தொலைந்து போன உங்க கோமணத்தை தேடுங்க.. மதிமுகவை விளாசிய ஹெச் ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2023, 1:52 pm

அடிமைகளே.. முதலில் தொலைந்து போன உங்க கோமணத்தை தேடுங்க.. மதிமுகவை விளாசிய ஹெச் ராஜா!!

சமீபத்தில் சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு ஒட்டுமொத்த இந்துக்களையும், எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அவர் பேசியது பெரும் விவாவதத்திற்குரியதாக மாறிவிட்டது.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும், திமுக கூட்டணி கட்சிகள் உதயநிதி கருத்துக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதில் சமீபத்தில் பேசிய வைகோவின் மகன் துரை வைகோ, சனாதன கலாசாரம் வேறு; ஹிந்து மதம் வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும், ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உதயநிதி ஸ்டாலின் பேசியதை, வடமாநிலங்களில் திரித்து, திராவிட இயக்கங்கள் ஹிந்துக்களுக்கு எதிரி போல் சித்தரித்துள்ளனர் என கூறினார்.

இந்த நிலையில் துரைவைகோவின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஏற்கனவே மதிமுக விற்கு MLA கள் திமுக சின்னத்தில் போட்டியிட்ட அடிமைகள். இந்த லட்சணத்தில் என்னமோ பாஜக பற்றி துரை வைகோவின் பேச்சு நகைப்பிற்குரியதாக உள்ளது. முதலில் தொலைந்து போன உங்க கட்சிய (கோமணத்த) கண்டு பிடிங்க என கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 315

    0

    0