விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

Author: Sudha
14 August 2024, 2:01 pm

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4.

இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வீட்டின் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே தெருவில் ஓடி வந்த வெறி நாய் ஒன்று சிறுவனைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த,வெறி நாய் சிறுவனின் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளது. அதனால், ரத்தம் வழிந்து வலி தாங்க முடியாமல் நிர்மல் அலறி துடித்துள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை விரட்டியுள்ளனர்.

சிறுவனை மீட்ட பெற்றோர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பதை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் நிர்மல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனால், குழந்தையின் உடலை வீட்டிற்கு கூட எடுத்து வராமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 630

    0

    0