அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன்… தாய் கண்முன்னே நிகழ்ந்த அதிர்ச்சி… வேலூரில் சோகம்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 6:40 pm

வேலூர் : வேலூரில் தாயுடன் வயலுக்கு சென்ற சிறுவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தாய் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகர் சாய்நாதபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரேவதி மற்றும் மகன் தினேஷ்குமார் (14). இன்று காலை ரேவதி அவரது மகன் தினேஷ்குமாருடன் நிலத்திற்கு சென்றார்.

அப்போது, நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை இருவரும் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளனர். இதில் ரேவதா தூக்கி வீசப்பட்ட நிலையில், தாயின் கண் எதிரே மகன் தினேஷ்குமார் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த தாய் ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர். தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 776

    0

    0