திருக்குறள் சொன்னால் கரும்பு ஜூஸ் இலவசம்… பட்டதாரி இளைஞரின் விநோதமான முயற்சி ; குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 5:26 pm

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சிறுவர், சிறுமியர்கள் திருக்குறள் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஒப்புவித்தால் கரும்பு ஜூசினை இலவசமாக பட்டதாரி இளைஞர் வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க: பொறுப்பில்லாத தமிழக அரசு… இன்னும் ஒரு வாரம் தான் கெடு ; அதுக்குள்ள… ஜிகே வாசன் விடுத்த எச்சரிக்கை

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சாலை ஓரம் உள்ள கரும்புச் சாறு கடையில் பத்து வயதினருக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு திருக்குறள் வாசித்தால் ஒரு கரும்பு சாறு, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3 திருக்குறள் சொன்னால் ஒரு கரும்பு சாறு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் சாலை ஓரமாக கரும்பு சாறு கடை நடத்தி வரும் கோகுல செல்வன் என்கின்ற இளைஞர் வேலை செய்து கொண்டே பட்டப்படிப்பையும் படித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உள்ள குழந்தைகள் மத்தியில் திருக்குறள் ஒப்பிப்பத்தில் ஆற்றல் குறைந்து வருகிறது.

இதனை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டதாரி கோகுல செல்வன் குழந்தைகளை ஊக்குவித்து திருக்குறள் கற்றலை ஊக்கப்படுத்தவே இவ்வாறு தான் செய்து வருவதாக கடை நடத்தி வரும் பட்டதாரி இளைஞர் தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!