’அரைகுறை ஆடை அணியும் பெண்கள்’.. முக்கிய சினிமா பிரபலம் சர்ச்சை கருத்து!

Author: Hariharasudhan
13 February 2025, 12:31 pm

எல்லா தவறுகளுக்கும் ஆண்கள் ஆண்கள் எனச் சொல்வதா? அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீதுதான் தவறு என சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சென்னை: இது தொடர்பாக பேசியுள்ள சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், “பெண்கள் பாவாடை, புடவை என அணிய வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். எல்லா தவறுகளுக்கும் ஆண்கள் ஆண்கள் எனச் சொல்வதா?
அரைகுறை ஆடை அணியும் பெண்கள் மீதுதான் தவறு.

எந்த நாட்டில்தான் தவறு நடக்கவில்லை? எல்லா இடங்களிலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. எனவே, பெண்கள் மரபாக இருந்தால்தான் குடும்பப்பெண் என நினைத்து, ஆண்கள் அவர்களிடம் செல்லமாட்டார்கள். பெண்கள் தங்கள் உடையில் சரியாக இருந்தால் தவறுகள் குறைய நிறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில், சமீபத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ஏன் காவலர்களுக்கும் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் கடுமையாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன.

Anbuselvan about woman dress codes

இன்றுகூட, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில், கடந்த ஜனவரி மாதம் 22 அன்று, ஏழாம் வகுப்பு மாணவி, அந்தப் பள்ளி மாணவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்கும், திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர், கடந்த 20 நாட்களாக, காவல்துறையில் புகார் அளிக்காமல் தடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்திருக்கிறார்.

வேறு வழியின்றி, மாணவியின் பெற்றோர்கள், குழந்தைகளுக்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்த பிறகே, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், காவல்துறையில் புகார் அளிப்பதைத் தடுத்து தாமதப்படுத்திய திமுகவைச் சேர்ந்த ஜோதி என்ற நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: அறிவாலயத்தின் செங்கலை உருவும் வரை.. அண்ணாமலை சவால்.. திமுகவின் பதில் என்ன?

தமிழகம் முழுவதுமே, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. இதனைத் தடுக்கவோ, பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நாளைய தலைமுறையை உருவாக்கும் தமிழகப் பள்ளிகள், மிகுந்த பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போதுதான் தனது துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வார்?” எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வனின் பேச்சு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

  • முதல்ல பம்முறாங்க அப்றம் சட்டம் பேசுறாங்க..வேதனையில் ஃபயர் பட இயக்குனர்.!
  • Leave a Reply