கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிப்பு… ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விருதை வழங்கினார் குடியரசு தலைவர் …!!

Author: Babu Lakshmanan
27 September 2023, 6:35 pm

சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டடுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற நகரங்களை விட கோவை மாநகரில் பணிகள் சிறப்பாக இருக்கிறது. Build environment பிரிவில் உக்கடம் வாலாங்குளம், டிபி ரோடு பகுதியில் மாடல் ரோடு பணிகளுக்காக தேசிய அளவில் முதலிடம் கோவை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது.

இது தவிர தென்னிந்திய அளவில் சிறந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் கோவை மாநகராட்சி தேர்வாகி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று நடந்த விழாவில் மாண்புமிகு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், கோவை மாநகராட்சிக்கு பெருமைக்குரிய விருதை வழங்கி கவுரவித்து உள்ளார்.

கோவை மாநகராட்சி சார்பில் நமது துணை கமிஷனர் சிவகுமார் விருதை பெற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சிக்கு இது பெருமைமிகு அடையாளமாக இருக்கிறது.

கோவை மாநகராட்சிக்காக கேசிபி இன்ஃபரா லிமிடெட் நிறுவனம் இந்தப் பணிகளை செய்துள்ளது. கேசிபி இன்ஃபரா நிறுவனத்தின் பெருமைமிகு திட்டப்பணியாக பெரிய mile stone ஆக இது அமைந்துள்ளது.

கேசிபி இன்பரா நிறுவனம் டிபி ரோடு கிளாக் டவர், உக்கடம் ஐ லவ் கோவை, ரேஸ்கோர்ஸ் மீடியா டவர், தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை போன்றவற்றை வடிவமைத்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 474

    0

    0