கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்து இருந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார் (47), செந்தில்குமார் (40), முகமது யூசுப் (21) மற்றும் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கு குற்றவாளிகளான ஆனந்தகுமார், செந்தில் குமார், முகமது யூசுப் மற்றும் கார்த்திக் ஆகியோர்களை குண்டர் தடுப்பு (Bootleggers) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.