அச்சச்சோ.. மத்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்!!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2023, 3:51 pm
த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்
கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர் மற்றும் ரோஷன் பரித். இவர்களை காண்பதற்கு சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய இருவர் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது சிறையின் ஜெயலர் இவர்கள் எடுத்து வந்த உடமைகளை சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட்டில் பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை வைத்து எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர் கைதிகளாக இருந்த இருவரையும் அழைத்து இது குறித்து விசாரிக்கும் பொழுது சேதுராமன் மற்றும் சூரிய பிரகாஷ் இருவரும் கைதிகளாக உள்ள இருவருக்காக கஞ்சாவை எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பிஸ்கட் பாக்கெட்டில் இருந்த நான்கு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த ஜெயலர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கஞ்சாவை எடுத்து வந்த சேதுராமன், சூரிய பிரகாஷ் உட்பட கைதிகளாக உள்ள முஜிபூர் மற்றும் ரோஷன் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(இன்னும் சேதுராமன், சூரிய பிரகாஷ் கைது செய்யப்படவில்லை- புகைப்படம் இல்லை)