உடைகளுக்குள் மறைத்து தங்கம் கடத்தல் : சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 9:14 pm
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் பேரில் கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் அவ்விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்ததில் சந்தேகத்திற்கிடமான 20 நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
அவர்களை சோதனை செய்ததில் சட்டை பேண்ட் பாக்கெட்டுகள், உடைமைகளில் தங்கம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடமிருந்து 7.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் அவற்றின் மதிப்பு 4.11 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.