காரில் குட்கா பொருட்கள் கடத்தல் : வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது.. 350 கிலோ பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 4:31 pm

கோவை : குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து சுமார் 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் காட்டூர் காவல் நிலைய போலீசார் சோமசுந்தரம் மில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை இட்டனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து சுமார் 350 கிலோ குட்கா மற்றும் ஒரு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுஜாராம், கோவிந் மீனா ஆகிய 2 வட மாநில இளைஞர்கள் மற்றும் செந்தில்வேல் என்கிற சூரியா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0