நூதன முறையில் மதுபானம் கடத்தல்.. வாகனத்தை சோதனையிட்ட போலீசார் ஷாக் : 3 ஆயிரம் மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 2:06 pm

நூதன முறையில் மதுபானம் கடத்தல்.. வாகனத்தை சோதனையிட்ட போலீசார் ஷாக் : 3 ஆயிரம் மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது!!

விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன் மற்றும் போலீசார் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் பூத்தமேடு சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அதன் பின்புறத்தில் பயன்படுத்தப்பட்ட இளநீர் கழிவுகள் இருந்தது.

இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த இளநீர் கழிவுகளை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தபோது அதன் அடிப்புறத்தில் அட்டைப்பெட்டிகளில் 3000 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் வி.மருதூரைச் சேர்ந்த பரத் (வயது 21), விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்த விஷ்ணுதேவ் (23) என்பதும், அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பரத், விஷ்ணுதேவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 782

    0

    0