உணவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடரும் ரேசன் அரிசி கடத்தல் : கண்டு கொள்ளாத அதிகாரிகள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 9:18 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகரை சேர்ந்தவர் சர்புதீன், இவருடைய மகன்களான யாசின் ,பாசில் ஆகிய மூன்று பேரும் பெரிய பள்ளிவாசல் முன்பு ரேசன் அரிசி கடத்தி கொண்டு இருக்கும் போது திமுகவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தனிவட்டாசியர் குழிவேல் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடமும் ,ரேசன் அரிசி கடத்திய தகவல் சொன்னவரிமும், ரேசன் கடத்தியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு இருச்சகர வாகனங்களுடன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர் குழிவேல் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது ,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றவர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…