கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் தலையை சுற்றிய பாம்பு… பரவசத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்..!!

Author: Babu Lakshmanan
1 October 2022, 6:01 pm

கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் பாம்பு சுற்றி இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் தலையில் பாம்பு ஒன்று சுற்றி இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இதையடுத்து, அம்மன் சிலை தலையில் சுற்றியுள்ள பாம்பை பிடிப்பதற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், திருமயம் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக கோயிலுக்கு சென்று அந்தப் பாம்பை பிடித்தனர். அப்பாம்பு சிறிய ரக மலைப்பாம்பு என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்து அப்பாம்பை காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

  • Zee Tamil Mirchi Senthil மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!