ஐயப்பன் கோவிலில் புகுந்து படமெடுத்து ஆடிய கருநாகம் : நடைதிறந்த போது பூசாரி ஷாக்… வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2023, 6:32 pm
ஐயப்பன் கோவிலில் புகுந்து படமெடுத்து ஆடிய கருநாகம் : நடைதிறந்த போது பூசாரி ஷாக்… வைரலாகும் வீடியோ!!
மதுரை திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் உள்ள ஐயப்பன் சுவாமி கோயில் உள்ளது. கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இன்று காலை கோவில் பூசாரி கைலாசநாதன்(வயது 62).கோவில் நடை திறந்து ஐயப்பன் சன்னதி கதவை திறந்த போது பாம்பு சீரிய சத்தம் கேட்டது.
இதனை தொடர்ந்து அவர் அருகில் இருந்த பிரேம்குமார்.மற்றும் அவரது தந்தை பாலமுருகன் ஆகியோர் பாம்பை பிடிப்பதற்காக வன உயிரின ஆர்வலர் சகாதேவனிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருநகரை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சகாதேவன் லாவகமாக பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். இவர் தகவல் அறிந்து வந்து ஐயப்பன் கோவிலில் சன்னதி கதவருகே பதுங்கி இருந்த ஐந்து அடி நீள கருநாகப் பாம்பினை பத்திரமாக பிடித்து பையில் அடைத்து நாகமலை புதுக்கோட்டை வனத்துறை பகுதியில் விடப்பட்டது.
ஐயப்பன் கோவிலில் அதிகாலை நேரத்தில் புகுந்த ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு பத்திரமாக மீட்ட வன உயிரின ஆர்வலரை அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.