பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பாம்பு : லாவகமாக பிடித்த வனத்துறை ஊழியர் ..!

Author: kavin kumar
25 February 2022, 4:41 pm

புதுச்சேரி : புதுச்சேரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பாம்பு வனத்துறை ஊழியர் மீட்டு வனத்துறையில் விட்டார்.

புதுச்சேரி பெரியார் நகரில் அமைந்துள்ளது ஜீவானந்தம் அரசு பள்ளி. இப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அறையில் இருக்கும் மர அலமாரியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. அப்போது அலமாரி உள்ளே பார்த்த போது பாம்பு ஒன்று இருப்பது தெரிந்தது.

இதனை அடுத்து உடனடியாக புதுச்சேரி வனத்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை ஊழியர் சண்முகம் பள்ளிக்கு விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சார பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டார். மேலும் புதுச்சேரி அரசு பள்ளி வளாகத்திற்குள் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1288

    0

    0