கீரியிடம் சிக்கித் தவித்த பாம்பு… காப்பாற்றிய பொதுமக்கள் : பாம்புபிடி வீரர் உதவியுடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2022, 2:41 pm
கோவை : சிங்காநல்லூரில் கீரியிடம் சிக்கிய பாம்பை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையம் பின்புறம் சாரைப்பாம்பை, கீரி ஒன்று துரத்தி வந்தது. இதனால் அந்த பாம்பு அங்கிருந்த வலையில் மாட்டிக்கொண்டது.
ஏதோ சத்தம் வருவதை கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பாம்பும், கீரியும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்த மக்கள் கீரியை துரத்தி விட்டனர்.
அதன் பன்னர் அந்த பாம்பால் அந்த வலையில் இருந்து வெளிவே வர முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சிங்காநல்லூரை சேர்ந்த பாம்பு பிடி வீரரும், வக்கீலுமான சித்திரன் (வயது 25) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் வலையை அறுத்து அதில் மாட்டிக் கொண்டிருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். இதையடுத்து பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினடம் ஓப்படைத்தார். வனத்துறையினர் பாம்பை சோதனை செய்து வனப்பகுதிக்குள் விட்டனர்.