பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு : பிடிக்க சென்ற பாம்புபிடி வீரரை கொத்தியதால் ஷாக்.. 5 நிமிடத்தில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 9:59 am

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான 35 வயது மதிக்கத்தக்க முரளிதரன். இவருக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த தொலைபேசியில் தகவல் வந்ததை தொடர்ந்து, அங்கு உடனே சென்று அவர் பார்த்த போது அங்கு இருந்த மேஜை அடியில் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு என தெரிய வந்தது.

அந்தப் பாம்பை லாவகமாக வாலைப் பிடித்து தூக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரை கடித்து உள்ளது. அதனை பைக்குள் பிடித்து தூக்கி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ், வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அந்தப் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றி உள்ளார். இருந்த போதும் பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார்.

அங்கு வந்த வனத்துறை மற்றும் துடியலூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ajith Kumar Dubai 24H Car Race interview இதுக்குமேல என்ன வேணும்…விடாமுயற்சி COMING SOON…துபாயில் அஜித் சொன்ன தகவலால் வைரலாகும் வீடியோ..!