இப்படி பண்ணாதீங்க.. கெட்ட வார்த்தையால திட்டுறாங்க. சினேகன் செயலால் கோபபட்ட கன்னிகா..!

Author: Rajesh
19 May 2022, 6:48 pm

கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவர் முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பிறகு தான் இந்த அருமையான பாடல்களை எழுதியது இவரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள்.

பிக்பாஸ் பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் இடையிலேயே வெளியேறினார். இடையில் இவருக்கு நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இருவரும் லைவ்-ல், சினேகனிடம் தான் வரைந்த ஓவியத்தை கன்னிகா காட்ட, அவரோ தனது ஆசை மனைவிக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடனே கன்னிகா கோபப்பட்டு முத்தம் எல்லாம் லைவ் வீடியோவில் கொடுக்காதீர்கள், நான் வீடியோ விட மாட்டேன். கமெண்ட்ஸில் வந்து தப்பு தப்பாக பேசுவார்கள் என கூறி கட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி