ஒரு பக்கம் பனி.. மறு பக்கம் கனமழை.. நனைந்தபடியே செல்லும் பள்ளிக் குழந்தைகள் : கோவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 9:39 am

கோவையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதாலும், கேரள எல்லையில் இருப்பதாலும் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை, பெய்துவருகிறது. வழக்கத்தை விட அதிகமாக பெய்து வரும் நிலையில் கோவையில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவி வருகிறது.

இந்த பணி காலை 9 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றதை காணமுடிகிறது.

குறிப்பாக கோவை-சிறுவாணி சாலை, நீலாம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. மலைப்பிரதேசங்களில் இருப்பதுபோன்று பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் குழந்தைகள் அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், அவற்றை செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி கோவையில் தற்போது காந்திபுரம் துடியலூர் வடகோவை போத்தனூர் சுந்தராபுரம் உள்ளிட்ட கோவை சுற்றி பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது பள்ளி கல்லூரி மாணவிகள் நனைந்தபடியே செல்கின்றனர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 463

    0

    0