பிரபல நரிக்குறவர் இன பெண் அஸ்வினி கைது… பெண் வியாபாரியை கொலை செய்ய முயற்சி ; சிறையில் அடைத்த போலீசார்…!!

Author: Babu Lakshmanan
16 August 2023, 4:32 pm

செங்கல்பட்டு ; மாமல்லபுரம் அருகே பெண் வியாபாரியை கத்தியால் வெட்டியதாக சமூக வலைதளங்களில் பிரபலமான நரிக்குறவர் இன பெண் அஸ்வினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் வைரலான பெண் அஸ்வினி வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக அவர் வீட்டிற்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி மீது பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வந்தது.இவர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் வழக்கம் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடை அமைப்பதில் அஸ்வினிக்கும், நதியாவிற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஸ்வினி தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நதியாவை வலது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்த மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் 10 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருத்மங்கதன் தலைமையிலான போலீசார் பூஞ்சேரி பகுதியில் இருந்த அஸ்வினியை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, போலீசார் அஸ்வினியை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அஸ்வினியை புழல் சிறையில் அடைத்தார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 511

    0

    0