சமூக வலைத்தளத்தில் (Twitter) தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி அவதூறு வீடியோ பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி கவிஞர் வைரமுத்து அவர்களின் குரலில் பேசுவது போன்று தவறாக சித்தரித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோ X வலைத்தளத்தில் drsenthil என்ற twitter பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, புகார் தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்ஆய்வாளர் தகழனியப்பன், தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தகணபதி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சர்சைக்குரிய பதிவு தொடர்பாக twitter வலைத்தளபக்கம் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி, தெற்குவாடியகாடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செந்தில்நாதன் என்பதும் இவர் BE Computer Science படித்துவிட்டு பெங்களூரில் உள்ள L&T Technology Services (LTTS) என்ற தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடந்து அவரின் சமூகவலைதள பக்கங்களை ஆய்வு செய்ததில் இவர் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிடுபவர் என்பது தெரியவந்ததை, தொடர்ந்து செந்தில்நாதனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.