வாயோடு வாய் வைத்து திராட்சை ஊட்டும் நூதன போட்டி… காரைக்காலில் தம்பதிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Author: Babu Lakshmanan
17 January 2024, 8:10 pm

காரைக்கால் அருகே நடைபெற்ற வாயோடு வாய் வைத்து திராட்சை ஊட்டும் நூதன போட்டியில் தம்பதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை ஒட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இவ்வாண்டும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு குடும்ப தலைவி மற்றும் குடும்ப தலைவர்களுக்கான சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் குடும்ப தலைவருக்கு மட்டும் நெற்றியில் கோலை வைத்துக்கொண்டு தரையில் வட்டமிடுதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று கோல் சுற்றிய ஏராளமான ஆண்கள் விழுந்து எழுந்து சென்ற காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவிக்கு நடத்தப்பட்ட நூதன போட்டி அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்ய வைத்தது. கைப்படாமல் கணவன்மார்கள், மனைவிமார்களுக்கு திராட்சை ஊட்ட வேண்டும் என்பது போட்டியின் விதி.

சிறிய குச்சியில் குத்தப்பட்டுள்ள திராட்சையை வாயில் கவ்வி ஓடும் கணவன்மார்கள் மனைவிக்கு வாய் வழியே ஊட்டி போட்டி சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த போட்டிக்கு பலரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!