தனியார் தொண்டு நிறுவனமான கருணை இல்லத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை : 69 நபர்கள் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 11:00 am

தனியார் தொண்டு நிறுவனத்தின் கருணை இல்லத்தில் திடீர் சோதனை நடத்தி பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

காட்பாடி அடுத்த பெரிய ராமநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தொண்டு நிறுவன கருணை இல்லத்தில் (புனித ஜோசப் கருணை இல்லம்) பேரில் புகார் தரப்பட்டதை அடுத்து கோட்டாட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது சில முதியோர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பியதால் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அங்கிருந்த 69 நபர்கள் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும் பரிசோதனை செய்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2018 ம் ஆண்டு இந்த கருணை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று செயல்படுவவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி