குடோன் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள்…!! அதிகாரிகள் அதிரடி ரெய்டில் சிக்கிய ரூ.15 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள்…!

Author: kavin kumar
23 February 2022, 4:20 pm

சென்னை : புளியந்தோப்பு அருகே குடோனில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த கலைமணி(45) என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து சென்னையின் பெரும்பாலான கடைகளுக்கு குளிர் பானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள குளிர்பானங்கள் காலாவதி ஆகி இருப்பதாகவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து அவரது தலைமையில் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ஜெயகோபால் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் பேசுகையில்,” இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர்பானங்கள் காலாவதி ஆன நிலையில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிய வந்ததாகவும், அதை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைத்து உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ