நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை… அத்துமீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 5:44 pm

குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நீர்நிலைகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து கேரள, பாலக்காடு மாவட்ட சோலையார் கிராம் பஞ்சாயத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக – கேரள எல்லையை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, பில்லூர் அணை வற்றத் தொடங்கி உள்ளதால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்தவர் நடிகர் அஜித்… எனக்கும், அஜித்துக்கும் ஒரே வேவ் லென்த் ; ஜெயக்குமார் சொன்ன REASON..!!!

இந்நிலையில் தமிழகத்தில் கோவை உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலையுடன் கடுமையான வெயில் இருக்கும் என கூறிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளா, ஆணைகட்டி பகுதி மற்றும் அட்டப்பாடி இடையே உள்ள சோலையார் கிராம் பஞ்சாயத்து சார்பில், பொது நீராதாரங்களில் ஏற்பட்டு வரும் வறட்சி மற்றும் தண்ணீர் தடுப்பாட்டை கருத்தில் கொண்டு, நீரோடைகள், குளங்களில் மாசு ஏற்படுத்தும் வகையில் குளிப்பது, துணி துவைக்க தடை விதித்து உள்ளது.

மேலும், இது போன்ற செயல்களில் அத்து மீறுபவர்கள் மீது கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் 219(S)ன் கீழ் ரூ.50000 அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கபடும் என தெரிவித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ