லஞ்சம் வாங்கியதே இல்லைனு ஒருத்தர் சொல்லுங்க.. உங்க காலில் விழுகிறேன் : அதிகாரிகளை அதிர வைத்த ஊழல் தடுப்பு ஆய்வாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 8:06 pm

லஞ்சம் வாங்கியதே இல்லைனு ஒருத்தர் சொல்லுங்க.. உங்க காலில் விழுகிறேன் : அதிகாரிகளை அதிர வைத்த ஊழல் தடுப்பு ஆய்வாளர்!

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் ஐந்தாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.


இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் ரயில் நிலையம் பள்ளி கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு இன்று திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அறிவுரைகள் கூறி உறுதி மொழி ஏற்றனர்.

அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பேசிய திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி, ஊழலில் 185 நாடுகளில் 85 வது இடத்தில் நமது நாடு உள்ளது எனவும் அனைத்து துறைகளிலுமே ஊழல் உள்ளது.

ஊழலில் முதல் இடத்தில் உள்ள துறை எது என சொல்லுங்கள் என நகராட்சி ஊழியரிடம் கேட்டபோது. நகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்காமல் அமைதி காத்த நிலையில். ஊழல் தடுப்பு அதிகாரியே சார்பதிவாளர் அலுவலகமா ஆர்டிஓ அலுவலகமா வருவாய்த் துறையினரா எந்தத் துறை ஊழலில் முதல் இடத்தில் உள்ளது என கேட்டதற்கு ஊழியர்கள் ரிஜிஸ்டர் ஆபீஸ் , ஆர்டிஓ ஆபிஸ் என தெரிவித்த நிலையில் அனைவருமே லஞ்சம் வாங்குகிறார்கள்…. யாராவது வாங்காமல் இருக்கிறார்களா?

லஞ்சம் வாங்குவதால் எங்கே பிரச்சனை வருகிறது என்றும் இத்தனை வருட பணியில் நான் லஞ்சம் வாங்கவில்லை என ஒருவர் தெரிவியுங்கள்… நான் உங்கள் காலில் விழுகிறேன் என்று கூறிய நிலையில் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து ஆய்வாளரின் முகத்தையே பார்த்தனர்.

பொதுமக்கள் தங்களின் தேவைக்காக நம்மிடம் வரும்போது அவர்களின் எதிர்பார்ப்பை பார்க்கிறோம். ஆள் பாதி ஆடை பாதி பார்த்து அவர்களுக்கு மரியாதை அளிக்கிறோம். .அதே வார்த்தையை எளிமையாக வரும் பாமர மக்களுக்கு மரியாதை அளித்தால் உங்களை எதிரியாகவே பார்க்க மாட்டார்கள்.

நகராட்சியில் 10 லட்சம் ரூபாய் காண்ட்ராக்டில் இரண்டு சதவீதம் கமிஷன் கேட்டால் மேல் தட்டில் இருப்பவர்கள் வருவார்களா?… வரமாட்டார்கள் என்றும் 2009 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் லஞ்சமாக ஒருவரிடம் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் வாங்கித் தருமாறு கேட்டுப் பெற்ற நிலையில் பொருட்கள் சிறிதாக உள்ளது.

இதை கூடவா பார்த்த உங்களால் வாங்க முடியாது என அந்த அதிகாரியின் மனைவி கேட்டதால் பொருட்களை வாங்கித் தந்த நபருக்கு அந்த அதிகாரி போன் செய்து பொருட்கள் சிறிதாக உள்ளது வேறு மாற்றி தர கூறியுள்ளார்.

பொருட்களை மாற்ற மாட்டார்கள் என அந்த நபர் தெரிவித்துள்ளார். அதற்காக அப்படி என்றால் மேலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்குமாறு கேட்டதால் கோபமடைந்த நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அவரும் அவரது குடும்பமும் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் . லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் நீங்களும் உங்களது குடும்பமும் உங்களை சார்ந்தவர்களும் செழிப்பாக இருப்பார்கள்.

அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டால் வீட்டில் கொடுக்கப்பட்ட மரியாதை வெளியில் கிடைத்த மரியாதை அத்தனையும் தலைகீழாக போய்விடும்…

மாறிவிடும் எனவும் இதனால் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் அரசு அதிகாரிகள் அலுவலகங்களை நோக்கி வரும் மக்களுக்கு அவர்களது தேவைகளை மரியாதை அளித்து பூர்த்தி செய்தால் எந்த அவப்பெயரும் பிரச்சனையும் வராது என்றும் பேசிய நிலையில் ஏற்கனவே நாங்கள் எவ்வளவு லஞ்சம் வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியோ வாங்க சொல்கிறாரா அல்லது வேண்டாம் எனக் கூறுகிறாரா என்ற குழப்பத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளரின் முகத்தை பார்த்தபடி அதிகாரிகள் அமர்ந்திருந்தது காமெடியாக இருந்தது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 502

    0

    0