மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது…! திருவள்ளூரில் நடந்த கொடூரம்…!!

Author: kavin kumar
20 February 2022, 1:27 pm

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்ஆரணி தமிழ் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தினக் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மது அருந்தி விட்டு வீட்டில் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டு வருவது வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் பெற்றோருடன் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டன் தனது தந்தையை வேணுவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வேணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த ஆரணி போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!