’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

Author: Hariharasudhan
6 March 2025, 12:53 pm

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர்கள் முரளிதரன் (65) – ரோகிணி தம்பதி. இவர்களுக்கு பிரசன்னா வெங்கடேசன் (30) மற்றும் ஆதித்ய நாராயணன் (28) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், தந்தை முரளிதரன் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளைய மகன் ஆதித்ய நாராயணனுக்கு சற்று மன நல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும், அடிக்கடி பணம் கேட்டு தந்தையிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தந்தை – மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை – மகனுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த ஆதித்ய நாராயணன், கத்திரிக்கோலால் தந்தையின் கழுத்தில் குத்தியதில் முரளிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், ஆதித்ய நாராயணன் ரத்தக் கறை படித்த உடையுடன், தாய் ரோகிணியை அழைத்துக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரைச் சந்திக்க, அதே பகுதி வழியாகச் சென்ற ஆட்டோவை மறித்து ஏறியுள்ளார்.

இவ்வாறு தாயும், மகனும் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக்குக்கு (25) சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும், திருவல்லிக்கேணி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ஆதித்ய நாராயணன் தனது சகோதரரை போனில் அழைத்து, “தந்தையைக் கொலை செய்து விட்டேன். நீ சென்று பார்த்து இறுதிச் சடங்கை முடித்துவிடு” எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

Son killed father in Chennai

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக், நேராக ஆட்டோவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் ஒட்டிச் சென்றுள்ளார்.அங்கு ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது தாயை போலீஸசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், ஆதித்ய நாராயணன் அவரது தந்தையைக் கொலை செய்துவிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தேவையில்லாத கேள்வியை கேட்காதீங்க.. நிருபர்களிடம் இளையராஜா ஆவேசம்!

இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் ஆதம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் வெகுவாகப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் போலீசார் முரளிதரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!