காதலுக்கு எதிர்ப்பு.. தாய் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. சென்னையில் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
5 March 2025, 11:58 am

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவிக்கு பணம் தர மறுத்ததால் தனது தாய் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற மகன் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னையின் கொளத்தூர், ஹரிதாஸ் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவரது மகன் தினேஷ் (25), ரஜித்தா(25) என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பை மீறி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ரஜித்தாவை தினேஷ் திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து, அமைந்தகரை எம்.எம். காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் தினேஷை அவரது குடும்பத்தினர் வெறுத்துள்ளனர்.

இந்த நிலையில், வேலை எதுவும் இல்லாமல் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தினேஷ் தடுமாறி வந்துள்ளார். எனவே, தனது தாயாரிடம் பண உதவி கேட்டபோது, அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ், கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு, தினேஷ், தனது மனைவியுடன், தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

Petrol bomb attack to Mother

பின்னர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை தாயை நோக்கி வீசியுள்ளார். ஆனால், அவர் உடனடியாக கதவை மூடியதால், பெட்ரோல் குண்டு கதவில் பட்டு பற்றி எரிந்துள்ளது. இருப்பினும் ஆத்திரம் தீராத தினேஷ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு மனைவியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: தாயைக் கவனிக்க வந்த கேர் டேக்கருடன் தனிமை.. நிர்வாண வீடியோ எடுத்த மிரட்டிய பெண்!

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கார் மீது பற்றிய தீயை அணைத்த சரஸ்வதி, இந்த விவகாரம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் அவரைது மனைவியைக் கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply