கன்னியாகுமரி : ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் சாலைவசதி மற்றும் கும்பாறு இணைப்பு பாலம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை தோளில் தூக்கி சென்ற மகன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடராசி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள் கடந்து செல்ல கும்பாறு பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்காலிகமாக மரகட்டைகளை கொண்டு அவர்களாகவே நடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துள்ளனர். அந்த பாலம் மழை காலங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லும். ஆனாலும் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக அவ்வப்போது மர கட்டைகளை கொண்டு பாலம் அமைப்பார்கள்.
இந்த பகுதியில் பாலம் கட்ட 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முறையாக பழங்குடியின மக்கள் கருத்து கேட்காமல் தற்போது வரை அந்த பணிகள் கிடப்பில் போடபட்டுள்ளது இந்த நிலையில் பழங்குடியின மக்கள் அமைத்த தற்காலிக மர பாலம் தற்போது பெய்து வரும் மழையால் அடித்து சென்றது.
இந்த நிலையில் கோலஞ்சிமடத்தை சேர்ந்த வேலுபாண்டியதேவர் (வயது 67) உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தால் கும்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை,
இந்த நிலையில் இன்று ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில் மகன் தந்தையை தோளில் சுமந்த வண்ணம் சுமார் மூன்று கிலோ மீட்டர் சுமந்து கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றி பேச்சிபாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிர் இழந்தார்.
கோதையாறு பேச்சிபாறை சாலையும் குண்டும் குழியுமான பயன்படுத்த முடியாமல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் ஆதிவாசி பழங்குடியின முதியவர் உயிர் இழந்த சம்பவம் ஆதிவாசி மக்களை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.