விழுப்புரம் ; உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமணத்தில் பங்கேற்க வைத்த பாச மகனின் செயல் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசனின் தந்தை சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்தநிலையில், அன்பரசனுக்கும் சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தனக்காக சிறு வயது முதல் உழைத்து வந்த தனது தந்தை தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காவலர் அன்பரசன் எண்ணினார். இதற்காக அவரது தந்தையை மெழுகு சிலையாக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
பின்னர், தனது திருமணத்தில் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் தனது தந்தையை பங்கேற்க செய்தது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், திருமண ஊர்வலத்தின் போதும் தனது தந்தை உடன் இருப்பதைப் போல கொள்வது போல் அருகில் வைத்துக் கொண்டு வந்தது பார்ப்போரை நெகிழ செய்துள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
This website uses cookies.