கொள்ளையடிப்பதில் அப்பனை விட மகன் மிஞ்சிவிட்டார் : திமுக அரசுக்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சி.வி.சண்முகம் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2022, 12:55 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீர் குடிநீராகக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் ரூ.1502.72 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் பெற்று வருகிறது.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.