Categories: தமிழகம்

தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்…கேட்ட பணத்தை தராததால் ஆத்திரம்: கோவையில் பரபரப்பு..!!

கோவை: தந்தை பணம் தராத ஆத்திரத்தில் மகன் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம் புதிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச். எஸ். காலனியில் வசித்து வருகிறார்கள். சுரேஷ் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு புலியகுளம் பகுதியில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த விமலா (51) என்ற பெண்ணுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது அவரது மனைவி வசந்தாவுக்கு தெரிய வரவே கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து அவர் தனது கணவரைப் பிரிந்து மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருப்பசாமி அப்போது கிடைத்த ஓய்வூதிய பணப் பலன்களை காதலி விமலாவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது மகன் சுரேஷ் தனது தந்தையை அடிக்கடி நேரில் சந்தித்து தான் கஷ்டப்படுவதால் பணம் கொடுத்து கேட்டார். ஆனால் கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது சுரேசுக்கு தனது தந்தை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்யத் திட்டமிட்டார். நேற்று இரவு கருப்பசாமி அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அவர் போதையில் வந்ததால் காதலி விமலா கதவை திறக்காமல் படுத்து தூங்கி விட்டார்.

இதனையடுத்து அவரது வீட்டு வாசலில் கருப்பசாமி படுத்து இருந்தார் நள்ளிரவு சுரேஷ் தனது தந்தையிடம் பணம் கேட்பதற்காக வந்தார். படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தவரை எழுப்பி அந்த பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் நிலைதடுமாறிய கருப்பசாமி தப்பிப்பிருப்பதற்காக 10 மீட்டர் தூரம் ஓடி கீழே விழுந்தார்.

பின்னர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது தந்தை இறந்ததும் சுரேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார். கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷை தேடி வருகிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

26 minutes ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

46 minutes ago

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…

50 minutes ago

கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!

தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…

1 hour ago

நடிகையை கட்டிப்பிடித்து கடித்த பிரபுதேவா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக் சம்பவம்!

சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…

2 hours ago

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

17 hours ago

This website uses cookies.