மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரே அமர வைக்க இந்த அரசருக்கு மனமில்லை.
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கிய எண்ணிக்கை கோரிக்கை குறித்த கேள்விக்கு:
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்கள். விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார்.
மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது அதுதான் உண்மை. பாஜக ஆயுட்காலம் இந்த முறை பிகார் தேர்தலில் முடிந்து விடும். இந்தியா கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமையும்.
நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது குறித்த கேள்விக்கு : எப்போது பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. பலமான நாடு பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு தலை குனிய வேண்டும்.
விஜயகாந்த் இருக்கும் பொழுது தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வி தழுவி இருக்கிறார்கள்.
பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு: தமிழக அரசியலில் 20 சதவீதம் வாக்குகள் அதிமுக திமுகவுக்கு எதிராக இருக்கும் 70 சதவீத வாக்குகள் அதிமுகவா, திமுகவா என்று இருக்கும். பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும். திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் பாஜகவின் வளர்ச்சி பெரிதாக இல்லை.
ராகுல் காந்தி செல்லூர் ராஜு ராகுல் காந்தி குறித்து பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு:
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ளை மனம் படைத்தவர். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
விருதுநகர் தொகுதிக்கான முக்கிய திட்டங்கள் குறித்த கேள்விக்கு:
விருதுநகர் தொகுதியை பொருத்தவரை மதுரை விமான நிலையம் கையகப்படுத்துவது கூடுதலா பாதையை விரிவாக்கம் செய்வது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் முடிக்கப்பட வேண்டும். ரயில்வே துறையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கப்பட வேண்டும் திருமங்கலம் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். கைவிடப்பட்ட மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். விருதுநகர் தொகுதி மக்களுக்கு எனது நன்றி.
நட்சத்திரத் தொகுதி குறித்த கேள்விக்கு:
சென்னையில் இருந்த நட்சத்திரங்கள் இரவு வரும் போது எப்படி வானத்தில் நட்சத்திரம் தோன்றுமோ அதேபோல் விருதுநகர் தொகுதிக்கு வந்திருந்தார்கள். பகல் வந்ததும் நட்சத்திரம் எப்படி மறையுமோ அதேபோல் போட்டியிட்ட நட்சத்திரங்கள் தற்போது சென்னை சென்றிருக்கிறது என கூறினார்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.