உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டு தர வேண்டும் : ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 6:12 pm

திருப்பூர் : உக்ரைனில் இருக்கும் மகன்களை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள சூழ்நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்களின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர் .

குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

அந்த வகையில் திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த இந்திராணி பன்னீர்செல்வம் தம்பதியினரின் மூத்த மகன் அரவிந்த் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கூடிய சூழ்நிலையில் போர் துவங்குவதற்கு முன்பாகவே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் போர் தொடங்கி விட்டதால் டிக்கெட் ரத்தாகியிருப்பதாகவும் , தற்போது விடுதியில் உள்ள பாதாள அறைகளில் தங்கி இருப்பதாகவும் உணவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் போர் தீவிரமாகும் முன்பாக தங்கள் மகனை மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இன்று மனு அளித்தனர்.

இதேபோல் திருப்பூர் குமார் நகர் பகுதியை சேர்ந்த வாசு – சித்ரா தம்பதியினரின் மகன் முத்தையாலு சபரிஷ் அதே கல்லூரியில் ஆறாம் ஆண்டு படித்து வருவதாகவும் தங்கள் மகனையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொலைபேசி வாயிலாக நமது செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு மாணவர்களும் தற்போது வரை அப்பகுதியில் பதற்றம் மிக அதிக அளவில் இல்லை எனவும் தொடர்ந்து தூரத்தில் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தாங்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதாகவும் தங்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 1632

    0

    0