விரைவில் எஸ்பி வேலுமணி மாபெரும் தலைவராவார்.. கோவை புதிய மேம்பாலத்தில் வாஸ்து சரியில்லை : பிரபல ஜோதிடர் ஆரூடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 4:42 pm

கோவையில் போக்குவரத்து அதிகரித்து வந்த நிலையில்,திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாலத்தில் செல்வதற்கோ பொதுமக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயிர்கொல்லி பாலமாக தினமும் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த குபேரீஸ்வரர் ஆலயம், பிரபஞ்ச ஜோதிட சுடர் பிரசன்ன சாமி அதிரடியாக ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

கோவை மட்டுமின்றி வெளியூர் மக்களிடையே பிரபலமான இவர் ,குரல் வளம் மற்றும் முகத்தை பார்த்து ஜோதிட பலன் கூறுவதில் வல்லமை பெற்றவர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இவர், புதிதாக கட்டியுள்ள திருச்சி சாலை மேம்பாலத்தில் வாஸ்து சரியில்லை எனவும்,மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க விபத்து தடுப்பான் கண்ணாடிகளை மேம்பாலத்தில் அமைக்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக முதல்வரின் மு.க.ஸ்டாலின் இன்னும் நான்கு ஆண்டுகள் நிலையான ஆட்சி தருவார் எனவும்,அ.தி.மு.க.வில் தற்போது பொது செயலாளராகி உள்ள எடப்பாடி நிலைத்து நிற்பார் எனவும்,மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி மாபெரும் தலைவராக உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஆரூடம் கூறுகிறார்.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு வாய்ப்புகள் குறைவு என கூறும் அவர்,தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலைக்கு நல்ல சூழ்நிலைகளும்,வெற்றிகளும் வரும் சூழ்நிலை இருப்பதாக கூறினார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 968

    3

    3