புதுச்சேரியில் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள திமுகவுக்கும், அதனுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் – திமுக கூட்டணி போட்டியிட்டது. 30 தொகுதிகளிலும் போட்டியிட்ட இந்தக் கூட்டணி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, திமுக 6 இடங்களைப் பிடித்த நிலையில், திமுகவை விட கூடுதலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது.
இதனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சியானது திமுக. ஆனால், ஆளும் கட்சியாக இருந்த தங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனதில் புதுச்சேரி காங்கிரஸ் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது.
மேலும், சமீபத்தில், புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வட மாநில மாணவியிடம் நான்கு பேர் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் அரசுக்கு எதிராகத் திரும்பிய நிலையில், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் ஒலித்தா. காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
ஆனால், திமுக தரப்பில் எந்தவித போராட்டத்தையும் அறிவிக்கவில்லை, அக்கட்சியின் மாநிலத் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா. காரணம், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இருக்கும் நிலையில், வடமாநில மாணவி விவகாரத்தில் தலையிட்டால் பாஜக கூட்டணி இதனைத் திருப்பும் என்பதால் சிவா தவிர்த்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’ஆத்தி போலீசு’.. ஓடிய திமுக கவுன்சிலரின் மகன்.. பட்டாக் கத்திகளுடன் சிக்கியது எப்படி?
இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் நாளிதழுக்குப் பேசிய சிவா, “வடமாநில மாணவி விவகாரத்தில் காங்கிரஸ் அவர்கள் எண்ணத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துகின்றன, அதில் நாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை, அவர்களின் அரசியலைச் செய்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்து பேட்டி அளித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற வித்தயாசமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். நாங்கள் யாரையும் போராட்டத்துக்கு அழைக்கவில்லை. எங்கள் கட்சியின் வேலையைச் செய்கிறோம். அவர்க,ள் அவர்களது கட்சியின் வேலையைச் செய்கின்றனர். திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுகவிடம்தான் கேட்க வேண்டும்” எனக் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.